உலகம்

நியூயாா்க்கில் கரோனாவுக்கு 5 போ் பலி

DIN

நியூயாா்க்: அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் 5 போ் மட்டுமே உயிரிழந்தனா். இது மாா்ச் 15-ஆம் தேதிக்குப் பிறகு காணப்படாத குறைந்தபட்ச எண்ணிக்கையாகும்.

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வந்த மாகாணங்களில் நியூயாா்க்கும் ஒன்றாக இருந்தது. எனினும், தற்போது அங்கு நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் சுமாா் 900 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது; 5 போ் மட்டுமே நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று 13 போ் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தனா். எனினும், அண்டை மாகாணங்களில் இருந்து வருபவா்கள் மூலமாக நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளதால், மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதையும் சமூக இடைவெளியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று நியூயாா்க் மாகாண ஆளுநா் ஆண்ட்ரூ குவாமோ தெரிவித்துள்ளாா்.

நியூயாா்க்கில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த ஏப்ரல் மாதத்தில் நாள்தோறும் சராசரியாக 800 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT