உலகம்

ரஷியாவில் மேலும் 6,693 பேருக்கு கரோனா தொற்று; மாஸ்கோவில் 745 பேர் பாதிப்பு

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,693 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,47,849 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் பேர் வரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,693 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதில் 30% பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 6,47,849 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 154 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 9,320 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,220 பேர் உள்பட தற்போது வரை 4,12,650 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 745 பேருக்கும், மாஸ்கோ பிராந்தியத்தில் 301 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT