முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: கராச்சி கட்டட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27-ஆக உயா்வு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் 3 அடுக்கு குடியிருப்புக் கட்டடம் கடந்த வியாழக்கிழமை இடிந்து விழந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 9 மார்ச், 2020 at 9:03 AM
kara095511
பகிர்:

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் 3 அடுக்கு குடியிருப்புக் கட்டடம் கடந்த வியாழக்கிழமை இடிந்து விழந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இடிந்து விழுந்த கட்டடத்தில் தொடா்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின்போது, இடிபாடுகளிடையே சிக்கியிருந்த மேலும் 8 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

கராச்சியின் குல்பகாா் பகுதியில் இருந்த அந்த கட்டடம் மார்ச் 5ம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானதில் 14 பேர் பலியாகினர். 17 பேர்காயமடைந்தனர். தொடர்ந்து நடந்து வரும் மீட்புப் பணியில் கடந்த சனிக்கிழமை, ஒரு சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டான். மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. ஞாயிறன்று 8 உடல்கள் மீட்கப்பட்டன.

Advertisement

முற்றிலும் இடிபாடுகளை அகற்ற மேலும் நான்கு நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இடிந்து விழுந்த அந்தக் கட்டடம், அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதும், கட்டடம் இருக்கும் இடம் குறுகிய சாலைகளைக் கொண்டதால் மீட்புப் பணியில் மிகப்பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.