உலகம்

லண்டனில் உள்ள அம்பேத்கர் நினைவு இல்லம் மூடப்படுவதில் இருந்து தப்பியது

DIN


லண்டன்: லண்டனில் உள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்தை மூடும் நடவடிக்கையை இங்கிலாந்து அரசு கைவிட்டது.

மகாராஷ்டிர அரசு வைத்த கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக் கொண்டதால் அம்பேத்கரின் நினைவு இல்லம் மூடப்படுவதில் இருந்து தப்பியது.

இந்த நினைவு இல்லத்தை மூடும் நடவடிக்கை கைவிடப்பட்டது குறித்து லண்டன் மாகாண செயலாளர் ரோபெர்ட் ஜென்ரிக் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியர்களின் மிக முக்கிய தலைவரான அம்பேத்கரை நினைவு கூரும் வகையில், லண்டனில் டாக்டர் அம்பேத்ரின் நினைவு இல்லத்தை செயல்பட அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி வழங்கி, நினைவு இல்லம் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வடக்கு லண்டனில் 1921 - 22ம் ஆண்டில் மாணவராக இருந்த போது அம்பேத்கர் தங்கியிருந்த வீடு, அவரது நினைவாக அம்பேத்கர் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT