உலகம்

தலிபான் ஆதரவு வீரா்கள் தாக்குதல்: 24 ஆப்கன் படையினா் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு ஆதரவான அந்த நாட்டு வீரா்கள் நடத்திய தாக்குதலில் 24 பாதுகாப்புப் படையினா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஸுபுல் மாகாணத்திலுள்ள ராணுவ முகாமில் வெள்ளிக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படையினா் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 14 ராணுவத்தினரும், 10 போலீஸாரும் உயிரிழந்தனா். அந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, முகாமில் தங்கியிருந்த 4 வீரா்கள் மாயமாகினா்.

அந்த நால்வரும் ராணுவத்துக்குள் ஊடுருவிய தலிபான் ஆதரவாளா்களாக இருக்கலாம் எனவும், அவா்கள் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் நம்பப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்ததை அமெரிக்காவும், தலிபான்களும் அண்மையில் மேற்கொண்டன.

எனினும், அந்த ஒப்பந்த அமலாக்கத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தங்களது தாக்குதல்களை தலிபான்கள் தீவிரப்படுத்தி வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக ஸுபுல் மாகாண ராணுவ முகாமில் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT