ஆப்கானிஸ்தானில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாரா மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் சீக்கியர்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்து பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 27 பேர் பலியாகினர். 8 பேர் காயடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தில் பயங்கரவாதிகள் 4 பேரும் கொல்லப்பட்டனர். எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினச் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.