உலகம்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கரோனா தொற்று உறுதி

DIN


இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

71 வயதாகும் இளவரசர்  சார்ஸுக்கு கரோனா பாதிப்பு இருப்பதை க்ளாரன்ஸ் மாளிகை உறுதி செய்துள்ளது.

அவருக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், சோதனையில் இளவரசர் சார்லஸுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருவரும் தற்போது ஸ்காட்லாந்தில் தங்கியிருக்கும் நிலையில், இளவரசரும், அவரது மனைவியும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இளவரசர் சார்லஸின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், அவர் கடந்த சில வாரங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால், அவருக்கு யாரிடம் இருந்து கரோனா பரவியிருக்கும் என்பதை குறிப்பாகக் கண்டுபிடிப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT