கரோனா: கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார்
கரோனா பாதிப்புக்குள்ளான கனடா நாட்டுப் பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபி குணமடைந்தார்.
உலகம்கரோனா: கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார்
கரோனா பாதிப்புக்குள்ளான கனடா நாட்டுப் பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபி குணமடைந்தார்.
கரோனா பாதிப்புக்குள்ளான கனடா நாட்டுப் பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபி குணமடைந்தார்.
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கனடாவில் அந்த வைரஸால் இதுவரை 5,100 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 55 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் லண்டனிலிருத்து திரும்பிய கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். எனினும், தொற்று அறிகுறி இல்லாவிட்டாலும் கனடா பிரதமரும் அவரது குடும்பத்தினரும் அவர்களாகவே தனிமைப்படுத்திக்கொண்டனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் சனிக்கிழமை அறிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தான் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி என சோஃபி தெரிவித்துள்ளார்.