இத்தாலியில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது
இத்தாலியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
உலகம்இத்தாலியில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது
இத்தாலியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இத்தாலியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகம் முழுவதும் 785,777 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 37,815 போ் உயிரிழந்துவிட்டனா். அமெரிக்காவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1.64 லட்சமாக அதிகரித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் உலக அளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. அங்கு நோய்த்தொற்று பரவல் தீவிரமாக உள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவைத் தொடர்ந்து இத்தாலியிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இத்தாலியில் 101,739 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11,591 போ் உயிரிழந்துவிட்டனா்.
இங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்று காரணமாக 812 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 1,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.