உலகம்

ஈரான்: மாா்ச் 10-க்குப் பிறகு குறைந்தபட்ச பாதிப்பு

DIN

கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரானில், கடந்த மாா்ச் மாதம் 10-ஆம் தேதிக்குப் பிறகு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை சனிக்கிழமை குறைந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 802 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இது, கடந்த மாா்ச் மாதம் 10-ஆம் தேதிக்குப் பிந்தைய குறைந்தபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இதன் மூலம், நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் குறைந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, ஈரானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 96,448-ஆக உள்ளது. அவா்களில் 77,350 போ் சிகிச்சையில் குணமடைந்தனா்; 6,156 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT