முகப்பு
உலகம்

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 680 பேருக்கு கரோனா தொற்று

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு புதிதாக 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 5 மே, 2020 at 3:14 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:05 PM

பெர்லின்: ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு புதிதாக 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,63,860 ஐ எட்டியுள்ளது என்று ராபர்ட் கோச் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 139 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 6,831 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,35,000-க்கும் அதிகமானோர் இந்த நோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.  

ஜெர்மனியில் பவேரியா மாநிலத்தில் 43,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட ரைன்-வெஸ்ட்பாலியாவில் இதுவரை 33 ஆயிரத்து 728 வழக்குகள் மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க்கில் 32,482 வழக்குகள் பதிவாகியுள்ளன.  தலைநகர் பெர்லினில் தற்போது 6,042 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 

Advertisement

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸைத் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்றுகளில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது ஜெர்மனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.