முகப்பு
உலகம்

ரஷியாவில் தொடர்ந்து 4வது நாளாக 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,599 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Updated On : 6 மே, 2020 at 4:32 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:06 PM


மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,599 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 1,65,929 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்ந்து நான்காவது நாளாக 10 ஆயிரம் பேர் நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கரோனா வைரஸ் மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கரோனாவுக்கு ஒரே நாளில் 86 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,537 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,462 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 21,327 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

Advertisement

தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,858 பேர் கரோனாவுக்கு புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 85,973-ஐ எட்டியுள்ளது. 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 2,27,792 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக ரஷியாவின் நுகர்வோர் உரிமை மற்றும் மனித நல்வாழ்வு கண்காணிப்புக் குழு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.