முகப்பு
உலகம்

சவ ஊர்வலத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: ஆப்கனில் 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சவ ஊர்வலம் ஒன்றில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், 15 பேர் பலியாகினர்.

Updated On : 12 மே, 2020 at 4:23 PM
தற்கொலைப்படை தாக்குதல்
பகிர்:

காபூல்: ஆப்கானிஸ்தானில் சவ ஊர்வலம் ஒன்றில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், 15 பேர் பலியாகினர்.

இதுதொடர்பாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரவித்துள்ளதாவது:

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகணத்தில் உள்ள குஷ் குனர் மாவட்டத்தில் செவ்வாயன்று மரணமடைந்த உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவரின் சவ ஊர்வலம் நடைபெற்றது.  அந்த ஊர்வலத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை  தாக்குதலில் 15 பேர் பலியாகினர். மேலும் 56 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

Advertisement

காயமடைந்தவர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்காக நங்கர்ஹார், குஷ் குனர் மற்றும் அருகிலுள்ள ஜலாலாபாத் மருத்துவமனைகளில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.