பெர்லின்: ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 933 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்பு 1,72,239 ஆக அதிகரித்துள்ளது என்று ராபர்ட் கோச் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. தொடர்ந்து, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
அதேபோன்று ஜெர்மனியிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 933 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,72,239 ஐ எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 89 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 7,723 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அந்நாட்டில் சுமார் 1.50 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
உலகளவில் இதுவரை 3 மில்லியன் மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,97,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.