கரோனா ஊரடங்கில் வேலை இழந்தவருக்கு லாட்டரியில் ரூ. 47 கோடி பரிசு!
கரோனா ஊரடங்கில் வேலை இழந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ. 47 கோடி பரிசு கிடைத்துள்ளது.
வெலிங்க்டன்: கரோனா ஊரடங்கில் வேலை இழந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ. 47 கோடி பரிசு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக நியூசிலாந்தின் ‘ஸ்டப்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரைச் சேர்ந்த ஒருவர் இந்த கரோனா ஊரடங்கின் காரணமாக தான் செய்து வந்த வேலையை இழந்து சிரமப்பட்டு வந்துள்ளார். அவரது மனைவி அந்நாட்டு சுகாதாரத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். வேலையில் இருந்த சமயத்தில், அவர் அந்நாட்டில் இணையதள லாட்டரி நடத்தும் ‘லாட்டோ’ நிறுவனத்தில் இருந்து லாட்டரி எண் ஒன்றைப் பெற்றுள்ளார்.
Advertisement
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள குலுக்கல் முடிவில் அந்த நபருக்கு அந்நாட்டு மதிப்பில் 10.3 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 47 கோடி ரூபாய்) பரிசாகக் கிடைத்துள்ளது. இதனால் அவரும் அவரது மனைவியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பரிசுத்தொகை தற்போது வங்கியில் அவர்கள் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை அடையாளம் வெளியிடப்படாத அந்த தம்பதியினர் இந்தப் பரிசின் காரணமாக தங்கள் வாழக்கை நிலையில் பெரிதாக எதையும் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றும், எப்போதும் போல இருக்கவும், இயன்ற வரை பிறருக்கு உதவவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.