விபரீதமான டிக் டாக் சவால்: பல்லை உடைத்துக்கொண்ட பாடகர்!
விபரீதமான டிக் டாக் சவால் ஒன்றினால் அமெரிக்கப் பாடகர் ஒருவரின் முன்பல் உடைந்துபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: விபரீதமான டிக் டாக் சவால் ஒன்றினால் அமெரிக்கப் பாடகர் ஒருவரின் முன்பல் உடைந்துபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் புகழ்பெற்ற பாடகர் ஜேசன் டெருலொ. இவரது “விகில்” மற்றும் “டாக் டர்டி” உள்ளிட்ட ஆல்பங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை.
இந்நிலையில் ஜேசன் டெருலொ டிக் டாக் சவால் ஒன்றினை மேற்கொண்டார். அதன்படி எலக்ட்ரிகல் ட்ரில் எனப்படும் துளையிடும் கருவி ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ள சோளத்தினை சாப்பிடுவதே அவர் மேற்கொண்ட சவாலாகும்.
Advertisement
இதுதொடர்பான விடியோ ஒன்றினை ஜேசன் டிக் டாக்கில் பதிவேற்றியிருந்தார். அதில் ஆரம்பத்தில் புன்னகையுடன் சோளத்தினை உண்ணத் தயாராக இருக்கும் ஜேசன், சோளத்தினை வேகமாகச் சுழற்றுவதற்காக எலக்ட்ரிகல் ட்ரில் இயங்கத் துவங்கியவுடன் வலியில் துடிக்கிறார், இந்தக் காட்சி விடியோவில் பதிவாகியிருந்தது. பின்னர் அவர் தனது உடைந்த முன்பல்லை விடியோவில் காட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.