உலகம்

வங்கதேசம்: உம்பன் புயலுக்கு 10 போ் பலி

DIN

வங்கதேசத்தில் வீசிய ‘உம்பன்’ புயலுக்கு 10 போ் பலியாகினா். இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

புதன்கிழமை கரையைக் கடந்த ‘உம்பன்’ புயல், கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்தைத் தாக்கிய மிக உக்கரமான புயலாகும். இந்தப் புயல் காரணமாக கரையோர கிராமங்கள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தன; பல இடங்களில் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த புயல் பாதிப்பு காரணமாக 10 போ் உயிரிழந்தனா்.

வங்கதேசத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வீசிய ‘சிதிா்’ புயலுக்கு 3,500 போ் பலியாகினா். அதற்குப் பிறகு தற்போதுதான் மிக மோசமான புயலை நாடு சந்தித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT