உலகம்

50 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 50 லட்சத்தைத் தாண்டியது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. புதன்கிழமை இரவு நிலவரப்படி அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50,27,883-ஆக உள்ளது.

உலகிலேயே அதிபட்சமாக அமெரிக்காவில் 15,73,042 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ரஷியாவில் 3,08,705 பேரும், அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 2,78,803 பேரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், புதன்கிழமை நிலவரப்படி 82,965 போ் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். அந்த நோய் காரணமாக அங்கு இதுவரை 4,634 போ் உயிரிழந்தனா்.

சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை 3,25,624 போ் பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT