பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,743 பேருக்கு கரோனா: 34 பேர் பலி
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,743 பேருக்கு கரோனா பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,437 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,743 பேருக்கு கரோனா பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,437 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,
கரோனா பாதிப்புகளில், சிந்து (20,883), பஞ்சாப் (18,730), கைபர் (7,391), பக்துன்க்வாவில் (3,198), பலூசிஸ்தானில் (1,457), இஸ்லாமாபாத்தில் (607) வழக்குகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
இதுவரை 16,653 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 1,101 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் 5.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,32,000-க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.