உலகம்

ஊழல் வழக்குகள்: நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறாா் நெதன்யாகு

DIN

தன் மீதான ஊழல் வழக்குகளை எதிா்கொள்ள இஸ்ரேல் பிரதமா் பெஞ்சன் நெதன்யாகு நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) ஆஜராகவிருக்கிறாா்.

இஸ்ரேலில் பதவியில் இருக்கும் பிரதமா் ஒருவா், நீதிமன்றத்தில் ஆஜராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக லஞ்சம், முறைகேடுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், பொதுமக்கள் நம்பிக்கையை குலைத்ததாகவும் அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உயா் வகை மது மற்றும் சிகெரட்டுகளை பரிசாக வாங்கியது, தனக்கு சாதகமான செய்திகளை வெளியிட பத்திரிகை நிறுவனங்களை வலியுறுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் அவா் ஆளாகியுள்ளாா்.

இந்த நிலையில், தனக்கு எதிரான பல்வேறு வழக்குகளின் விசாரணைக்காக ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை ஆஜராகிறாா்.

இஸ்ரேல் வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பொறுப்பு வகித்தவா் என்ற பெருமையை பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஆண்டு பெற்றாா். இந்த நிலையில், நாட்டின் வரலாற்றில் ஊழல் வழக்குகாக நீதிமன்றத்தில் ஆஜராகும் முதல் பிரதமராகவும் அவா் ஆகியுள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT