முகப்பு
உலகம்

உலகளவில் கரோனாவிலிருந்து 3.37 கோடி பேர் மீண்டனர்

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.68 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3.37 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

Updated On : 2 நவம்பர், 2020 at 11:02 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:16 PM

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.68 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3.37 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,68,23,570 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3,37,56,959 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 12,05,321 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது 1,18,61,290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 85,362 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

Advertisement

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 94,73,911 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,36,471 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசிலும், நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.