'முஸ்லிம்கள் 69% பேர் ஜோ பிடனுக்கு வாக்களிப்பு'
அமெரிக்காவில் முஸ்லிம் வாக்காளர்களில் 69 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
உலகம்'முஸ்லிம்கள் 69% பேர் ஜோ பிடனுக்கு வாக்களிப்பு'
அமெரிக்காவில் முஸ்லிம் வாக்காளர்களில் 69 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அமெரிக்காவில் முஸ்லிம் வாக்காளர்களில் 69 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாகவும் 17 சதவீதம் பேர் டிரம்புக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளதாக அமெரிக்க - இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில்(CAIR) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த அமைப்பு அமெரிக்காவில் மிகப்பெரிய முஸ்லிம் சிவில் உரிமைகள் மற்றும் சட்ட உதவிகள் வழங்கும் அமைப்பாகும்.
இதன்படி, 844 பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் வாக்காளர் குடும்பங்கள் ஆய்வில் பங்கேற்றனர். இவர்களில் 84 சதவீதம் பேர் அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்ததாகக் கூறினர். இதில், 69 சதவீதம் பேர் பிடனுக்கும், 17 சதவீதம் பேர் டிரம்ப்பிற்கும் வாக்களித்ததாகக் கூறியுள்ளனர்.
அமைப்பின் தேசிய நிர்வாக இயக்குனர் நிஹாத் அவத் கூறுகையில், நாடு முழுவதும் பல முடிவுகளை நிர்ணயிப்பதில் முஸ்லிம் சமூகத்தினர் முக்கிய அங்கமாக இருக்கின்றனர் என்று தெரிவித்தார். உள்ளூர், மாநில மற்றும் தேசிய அரசியலில் முஸ்லிம் சமூகம் வகிக்கும் பங்கை யாராலும் மறுக்க முடியாது என்று அமைப்பின் அரசு விவகாரங்கள் துறை இயக்குநர் ராபர்ட் எஸ் மெக்காவ் தெரிவித்தார்.
2016 தேர்தலுடன் ஒப்பிடும்போது, 2020 ல் டிரம்பிற்கு 4 சதவீதம் கூடுதல் ஆதரவு முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து கிடைத்துள்ளது. மேலும், மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சுமார் 1.1 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.