அமெரிக்க அதிபர் டிரம்ப் 
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: டெக்சாஸில் 38 இடங்களில் டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணமான டெக்சாஸில் 38 இடங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 

DIN


அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணமான டெக்சாஸில் 38 இடங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைகிறது. தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

இந்த தேர்தலில் அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களில் 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக அமர முடியும். 

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 10.45 மணி நிலவரப்படி, ஜோ பிடன் 223 வாக்குகளும், டிரம்ப் 204 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்காவின் முக்கிய மாகாணமான டெக்சாஸ், புளோரிடா என 38 இடங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 

ஏற்கனவே ஓக்லஹாமா, கெண்டகி, இண்டியானா, அர்கஜ்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விரிஜினியா போன்ற மாகாணங்களில் டிரம்ப் பெற்றி பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிம்கானா... பூனம் பாஜ்வா!

‘மௌ'..னி...கா.... மௌனி ராய்!

விஜய் பக்குவப்படவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!

இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்

SCROLL FOR NEXT