முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் வேலை இழப்பு அபாயத்தில் 35 லட்சம் பேர்

கரோனா தொற்று பரவலால் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசியா நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா தொற்று பரவலால் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசியா நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாஅவின் வளர்ச்சி இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3.49 சதவீதமாக சரிந்துள்ளது, 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகள் சந்தித்துள்ள கடுமையான சரிவாகும்.

இதனால் 35 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, ​​இந்தோனேசியாவில் மொத்தம் 4,26,000 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது மற்றும் 14,348 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தோனேசியாவில், விவசாயத்தைத் தவிர சுற்றுலாத் துறையை பெரிதும் நம்பியுள்ளது, இது நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால் உலகளவில் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஜகார்த்தா செப்டம்பர் மாத பாதியில் இருந்து 4 வாரம் பொதுமுடக்கம் அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.