அமெரிக்க வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜோ பிடன்!
அமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற அதிபர் வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பிடன் பெற்றுள்ளார்.
உலகம்அமெரிக்க வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜோ பிடன்!
அமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற அதிபர் வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பிடன் பெற்றுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற அதிபர் வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பிடன் பெற்றுள்ளார்.
உலக நாடுகளே எதிா்நோக்கிய அமெரிக்க அதிபா் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
தொடர்ச்சியாக, தேர்தல் வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது. இதிலும் வேட்பாளர்கள் இருவருக்கும் இடையே குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசமே இருந்தன. எனினும் தற்போதைய நிலவரப்படி அதிக வாக்குகள் பெற்று ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். எனினும் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையாத சூழலில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் சாதனையையும் முறியடித்துள்ளார் என்று அந்நாட்டு ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி, பிடனுக்கு 72 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட இது அதிகம் என தேசிய பொது வானொலி (என்.பிஆர்) தெரிவித்துள்ளது,.
முன்னதாக, 2008ல் ஒபாமா 67.32 மில்லியன் வாக்குகள் பெற்றுள்ளார். ஒபாமா பெற்றதை விட ஜோ பிடன் 3 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
அமெரிக்க வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஜோ பிடன் 264 வாக்குகளும், டிரம்ப் 214 வாக்குகளும் பெற்று முன்னிலையில் உள்ளனர்.