ரஷியாவில் புதிததாக 20,582 பேருக்கு கரோனா தொற்று
ரஷயாவில் புதிததாக 20,582 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது.
ரஷயாவில் புதிததாக 20,582 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,582 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு நாளில் பதிவான அதிக பாதிப்பாகும்.
அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 6,253 பேர் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 1,733,440 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 378 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 29,887 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 16,955 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,296,124 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.