முகப்பு
உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு 5.37 கோடி: பலி 13.10 லட்சமாக உயர்வு

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 100 ஆக உயர்ந்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 100 ஆக உயர்ந்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 216  நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்பபடி 5 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,75,55,673 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

உலக முழுவதும் இதுவரை 13,10,250 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் 1,48,20,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 1,09,561 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →