உலகம்

அனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கரோனா தடுப்பு மருத்து: அதிபர் டிரம்ப்

DIN

வாஷிங்டன்:  அனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும், கடந்த ஒன்பது மாதங்களில் கரோனா தொற்று பரவலை சமாளிப்பதற்காக தனது நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் வேட்பாளர்  ஜோ பைடன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசினார். 

அப்போது, கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்தி, முன்னோக்கி செல்வதாக நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், கரோனா தொற்றுக்கு பயனுள்ள மருந்துகளை அடையாளம் காணும் செயல்முறையை விவரித்ததுடன், இது அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய அணிதிரட்டல் பயிற்சிகளில் ஒன்றாகும் என்றார். 

தொற்று காலத்தில் பல நாடுகளுக்கு வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்கி அவர்களது பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளோம். 

கரோனா தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் நோயறிதல்களில் முன்னேற்றம், உற்பத்தி மற்றும் விநியோகத்தை எளிதாக்குவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் தனது நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு வருகிறது. 

அதன்படி, 2021 ஏப்ரலில் கரோனா தடுப்பூசி பிஜர், அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்கும் என்று கூறிய டிரம்ப், "முன்னிலை பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ள அமெரிக்கர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும்" என்று கூறினார்.

தடுப்பூசியை விநியோகம் செய்வதற்கான 'அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை' பெறுவதற்கு தனது நிர்வாகம் தொடர்ந்து செயல்படும். 

தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைக்க நாம்  ஜூலை மாதம் செய்த முதலீடானது, பிஜர் தடுப்பு மருந்தை கட்டணமின்றி இலவசமாக கிடைப்பதை சாத்தியமாக்கி உள்ளது. 

இதற்காகவும், தடுப்பு மருந்து முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த டிரம்ப், இது ஒரு நம்பமுடியாத முயற்சி என்று கூறினார்.

கரோனா நோய்த்தொற்றை உலகின் பிற பகுதிகளுக்கும் பரவுவதற்கு சீனா அனுமதித்தாக பல சந்தர்ப்பங்களில் அவதூறாக பேசிய 74 வயதான டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற 77 வயதான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தேர்தல் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT