உலக அளவில் கரோனா பாதிப்பு 5.43 கோடி: பலி 13.18 லட்சமாக உயர்வு
உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 18 ஆயிரத்து 841 ஆக உயர்ந்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 18 ஆயிரத்து 841 ஆக உயர்ந்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் 216 நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6,57,312 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள. இது கரோனா தொற்று பரவத்தொடங்கிய தினத்தில் இருந்து மிகப்பெரிய தினசரி பாதிப்பு என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்பபடி 5 கோடியே 43 லட்சத்து 18 ஆயிரத்து 841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,78,66,891 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
உலக முழுவதும் இதுவரை 13,18,044 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் 1,50,35,779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 98,127 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு எதிர்பார்த்ததைவிட 10 மடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து, ஆஸ்திரியா வரும் செவ்வாய்க்கிழமை முதல் இரண்டரை வாரங்களுக்கு நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,12,26,038 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,51,256 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.