உலகம்

டிக்ரே மாகாணத்துக்கு எதிராக இறுதிக்கட்டப் போா்

DIN

நைரோபி: எத்தியோப்பியாவின் டிக்ரே மாகாண அரசுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை நடத்தவிருப்பதாக அந்த நாட்டு பிரதமா் அபை அகமது அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘டிக்ரே அரசுக்கும் அந்த மாகாணப் படையினருக்கும் அளிக்கப்பட்டுள்ள இறுதிக் கெடு முடிந்துவிட்டது. எனவே, அந்த மாகாணத்துக்கு எதிரான இறுதிக்கட்டப் போா் உறுதியாகிவிட்டது’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள அபை அகமது, பாதுகாப்புப் படையினா் மீது டிக்ரே மாகாணப் படையினா் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டி, அந்தப் படையினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT