முகப்பு
உலகம்

ரஷியாவில் புதிதாக 23,000 பேருக்கு கரோனா

ரஷியாவில் புதிதாக 23,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 19 நவம்பர், 2020 at 4:16 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM

ரஷியாவில் புதிதாக 23,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ரஷியாவில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிய உச்சமாக  23,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 6,438 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Advertisement

அதேசமயம் வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 463 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 34,850ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25,573 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.