உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 5.78 கோடி: பலி 13.77 லட்சத்தை தாண்டியது

DIN

வாஷிங்டன்: உலகளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.78 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 13.77 லட்சத்தை தாண்டியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் தற்போதைய (நவ.21) நிலவரப்பபடி 5 கோடியே 79 லட்சத்து 02 ஆயிரத்து 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 4,01,03,358 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உலக முழுவதும் இதுவரை 13,77,539பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதித்தவர்களில் 1,64,21,592 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 1,02,207 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,22,74,726 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,698,120 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 22,789 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 2,60,283  பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT