முகப்பு
உலகம்

ரஷியாவில் புதிதாக 23,675 பேருக்கு தொற்று; மேலும் 507 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,675 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 நவம்பர், 2020 at 3:25 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:27 PM

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,675 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 23,675 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 21,62,503 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 507 பேர் உள்பட இதுவரை 37,538 பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

அதேநேரத்தில் தற்போதுவரை 16,60,419 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 464,546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.