முகப்பு
உலகம்

ஜெர்மனியில் புதிதாக 22,806 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டியது

ஜெர்மனியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Updated On : 27 நவம்பர், 2020 at 4:49 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

ஜெர்மனியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 
ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. ஜெர்மனியை பொறுத்தவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும புதிதாக 22,806 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,06,394ஆக உயர்ந்துள்ளது. 
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 426 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 15,586ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவிலிருந்து இதுவரை மொத்தம் 6,96,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.