முகப்பு
உலகம்

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா்

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

Updated On : 30 நவம்பர், 2020 at 11:46 AM
தில்லி சுற்றுச்சூழல் நலத் துறை அமைச்சர் கோபால் ராய்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:29 PM

தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடுத்த சில நாள்களுக்கு ராய் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்று அந்த அதிகாரி கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, அமைச்சரின் உடல்நிலை மேம்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

Advertisement

கடந்த நவ.26 அன்று, சுற்றுச்சூழல் அமைச்சர் கரோனா தொற்று இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.