முகப்பு
உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கரோனா

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 2 அக்டோபர், 2020 at 10:44 AM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:59 PM

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதில் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அதிபர் டிரம்ப் சுட்டுரையில் உறுதி செய்துள்ளார். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். 

Advertisement

ஏற்கெனவே அதிபரின் உதவியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிபர் டிரம்புக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.