முகப்பு
உலகம்

மெக்சிகோவில் அதிகரிக்கும் கரோனா தொற்று: இன்றைய பாதிப்பு 4,828, பலி 471

மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 4,828 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 471 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 7 அக்டோபர், 2020 at 12:11 PM
மெக்சிகோவில் அதிகரிக்கும் கரோனா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM

மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 4,828 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 471 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், மெக்சிகோவில் கரோனா நிலவரத்தைத் தெரிந்துகொள்வோம். 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இன்றைய நிலவரப்படி மெக்சிகோவில் 4,828 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த கரோனா பாதிப்பு 7,94,608 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கையைத் தொடர்ந்து 82,348 பேர் நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். 

இன்றுவரை, உலகளவில் 3.6 கோடி பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,54,712 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.