முகப்பு
உலகம்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமைக்கு அர்ஜென்டினா அரசு அனுமதி

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வறட்சியைத் தாங்கும் வகையிலான கோதுமைக்கு அர்ஜெண்டினா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2020 at 9:36 PM
கோதுமை பயிா்கள்( கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:05 PM

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வறட்சியைத் தாங்கும் வகையிலான கோதுமைக்கு அர்ஜென்டினா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உலகின் நான்காவது கோதுமை ஏற்றுமதி நாடாக உள்ள அர்ஜென்டினா, மரபணு மாற்றம் செய்யப்பட்ட வறட்சியை தாங்கும் எச்.பி 4 கோதுமை வகைக்கு அனுமதி வழங்கிய முதல்நாடு எனும் பெயரைப் பெற்றுள்ளது. 

மரபணு தொழில்நுட்ப நிறுவனமான பயோசெரஸால் உடன் இணைந்து அந்நாட்டு அரசு வறட்சியைத் தாங்கும் வகையிலான அதிக விளைச்சல் தரும் கோதுமை உற்பத்தியை மேற்கொள்ள உள்ளது. அர்ஜென்டினாவின் முக்கிய கோதுமை ஏற்றுமதி நாடாக உள்ள பிரேசிலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமைக்கு அனுமதி வழங்கியவுடன் வணிகரீதியிலான ஏற்றுமதியை அர்ஜென்டினா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதன்மூலம் வறட்சிகாலங்களிலும் விளைச்சல் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும் என பயோசெரஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஃபெடரிகோ ட்ரூக்கோ தெரிவித்துள்ளார்.

எனினும் தேசிய விதை நிறுவனத்தின் குளிர்கால தானியங்கள் குழுவின் வல்லுநர்கள் இந்த திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்வது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

வறட்சியால் பேரழிவிற்குள்ளான அர்ஜென்டினா பெரும்பாலான பகுதிகளில் கோதுமை விளைச்சல் பாதியாக குறைந்துள்ளதாக கடந்த மாதம் புவெனஸ் அயர்ஸ் தானிய பரிவர்த்தனை அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.