உலகம்

இந்தோனேசியாவில் மேலும் 4,301 பேருக்கு கரோனா தொற்று

DIN

இந்தோனேசியாவில் மேலும் 4,301 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,301 பேருக்கு கரோனா தொற்றி கண்டறியப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக ஜகார்டா 1,045, மேற்கு சுமத்ரா 484, மத்திய ஜவா 443, மேற்கு ஜவா 424 மற்றும் கிழக்கு ஜவா 291 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,53,461ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் மேலும் 79 பேர் பலியானார்கள். இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 12,347ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3,883 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,77,544ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை பொறுத்தவரை 34 மாகாணங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT