“நான் தோற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்”: தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப்
அதிபர் தேர்தலில் தான் தோற்றால் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதிபர் தேர்தலில் தான் தோற்றால் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.
இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். வழக்கத்திற்கு மாறாக 2 மணி நேரத்திற்கும் மேல் பேசிய டிரம்ப், “ஒருவேளை நான் தோற்றால் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். எனக்குத் தெரியாது.” எனத் தெரிவித்தது அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பைக் கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து கரோனா தொற்று பாதிப்பு, அரசு நிர்வாகம் குறித்துப் பேசிய டிரம்ப் ஜனநாயகக் கட்சியின் ஜொ பிடனை விமர்சித்தார்.