முகப்பு
உலகம்

ஆப்கனில் குண்டுவெடிப்பு: 16 பேர் பலி, 90 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் சாலையோரத்தில் கிடந்த குண்டுவெடித்ததில் 16 பேர் பலியானார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆப்கானிஸ்தானின் சாலையோரத்தில் கிடந்த குண்டுவெடித்ததில் 16 பேர் பலியானார்கள். 

ஆப்கானிஸ்தான், ஹார் மாகாணத்தின் ராவல் பிண்டியிலிருந்து 18 பேருடன் மினிபேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. தாங்கோஸ் சாலையில் அந்த பேருந்து வந்துகொண்டிருந்தபோது சாலையில் கிடந்த குண்டுவெடித்தது. 

இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 16 பேர் பலியானார்கள். மேலும், 90 காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் சடலங்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.