முகப்பு
உலகம்

தென் ஆப்பிரிக்கா: சுகாதாரத் துறை அமைச்சருக்கு கரோனா

தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்வேலி கைஸுக்கும் அவரது மனைவி மே மஷேகோவுக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 20 அக்டோபர், 2020 at 11:44 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:10 PM

தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்வேலி கைஸுக்கும் அவரது மனைவி மே மஷேகோவுக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எனக்கும் மஷேகோவுக்கும் கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. எனக்கு அசாதரணமான சோா்வு ஏற்பட்டு, பசியில்லாமல் போனது. மஷேகோவுக்கு இருமல், மயக்கம் இருந்தது. அதையடுத்து, எங்கள் இருவருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

Advertisement

எங்கள் இருவருடனும் நெருக்கமாக இருந்த அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.