உலகளவில் கரோனா பாதிப்பு 4.42 கோடியைத் தாண்டியது
உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.42 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் 3 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.42 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் 3 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
புதன்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,42,52,677 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,24,47,505 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,17,1,479 பேர் உயிரிழந்துள்ளனர்
உலகம் முழுவதும் தற்போது 10,63,3,693 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 80,024 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
Advertisement
உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 9,03,8,030 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,32,084 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசில் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளன.