உலகம்

பிரணாப் முகர்ஜி மறைவு: அமெரிக்க வெளியுறவுத்துறை இரங்கல்

DIN

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கள் கிழமை) மாலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கக்கூடிய தலைவரை இழந்து வாடும் இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT