உலகம்

கலிபோர்னியா காட்டுத் தீ விபத்தில் மேலும் 3 பேர் பலி

DIN

கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோவின் வடகிழக்கில் ஏற்பட்ட காட்டுத்தீ மூன்று வாரங்களுக்கும் மேலாக எரிந்து வருகிறது. கலிபோர்னியாவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் கருகியுள்ளன.

அதிகரித்து வரும் காட்டுத் தீ சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்டு குடியிருப்புகளை அழித்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மரங்கள் தீயில் கருகியுள்ளன.

கலிபோர்னியாவில் சமீபத்தில் அதிகரித்துள்ள வெப்ப அலைகளால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள வெப்பஅலைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் கலிபோர்னியாவின் பட் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக மூன்று பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகரித்து வரும் காட்டுத் தீயால் நகரை விட்டு வெளியேற பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

பட்கவுண்டி பகுதியில் இதுவரை 85 பேர் காணாமல் போயுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக காற்று வீசுவதால், இதுவரை 25 மைல் தூரம் வரையில் காட்டுத்தீ பரவல் அதிகரித்துள்ளது. கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் கூறுகையில், காட்டுத்தீயைத் தடுக்க 560க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT