முகப்பு
உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு 2.97 கோடியாக அதிகரிப்பு!

உலக அளவில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 2.97 கோடியைத் தாண்டியுள்ளது. 

Updated On : 16 செப்டம்பர், 2020 at 8:29 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:51 PM

உலக அளவில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 2.97 கோடியைத் தாண்டியுள்ளது. 

உலக முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருக்கிறது. 

இந்நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2.97 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,97,24,117 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோன்று இதுவரை 9,39,140 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2,15,38,547 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 

Advertisement

உலகளவில் கரோனா பாதிப்பில் மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதன்படி அமெரிக்காவில் 67,88,147 பேரும், அதையடுத்து இந்தியாவில் 50,18,034 பேரும், பிரேசிலில் 43,84,299 பேரும், ரஷியாவில் 10,73,849 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.