உலகம்

கரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானதாகக் கூறியவரின் சுட்டுரைக் கணக்கு நீக்கம்

DIN

கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்த தொற்றுநோய் நிபுணர் டாக்டர் லி-மெங் யானின் சுட்டுரைக் கணக்கை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் சீனாவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் டாக்டர் லி-மெங் யான் என்பவர் கரோனா வைரஸானது சீனாவின் வூஹான் மாகாண ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது எனும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுட்டுரைப் பயன்பாட்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவரின் சுட்டுரைக் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த லி-மெங் யான், “வைரஸ் காரணமாக வரவிருக்கும் ஆபத்து குறித்து சீன அதிகாரிகளை எச்சரித்தபோது, ​​அவர்கள் தனது எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இந்த உண்மையை மக்கள் தெரிந்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான்,எனது சுட்டுரைக் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இருப்பினும், யானின் கணக்கை தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து சுட்டுரைத் தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை

யான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT