உலகம்

அமீரகத்தில் குடும்ப விழாக்களில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளத் தடை

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக குடும்ப விழாக்களில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ள அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை தடைவிதித்துள்ளது.

கரோனா தொற்று பரவலால் உலக நாடுகள் பலவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக 10 பேருக்கு மேல் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசங்களை பயன்படுத்துவது, தனிமனித இடைவெளிகளைக் கடைபிடிப்பது மற்றும் கிருமிநாசினிகளை பயன்படுத்துவது ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT