முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3,06,304-ஐ எட்டியது!

பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,06,304-ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
Pakistan's coronavirus tally reahes 306,304
பகிர்:

பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,06,304-ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 633 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,06,304-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 4 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,420-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,92,869 போ் குணமடைந்துள்ளனா். 7,015 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வைரஸ் தொற்றுநோயைக் கண்டறிய இதுவரை 3,194,317 சோதனைகளை நடத்தியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.