உலகம்

ரஷியாவில் புதிதாக 8,135 பேருக்கு தொற்று; மேலும் 61 பேர் பலி

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,135 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 61 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 8,135 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதில், 27% பேருக்கு அறிகுறிகள் இருந்துள்ளன.

இதையடுத்து, மொத்த பாதிப்பு 11,59,573 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 61 பேர் உள்பட இதுவரை 20,385 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேநேரத்தில் தற்போதுவரை 9,45,920 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,93,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ரஷியாவில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒருநாள் கரோனா பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 2,217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 2 ஆம் தேதியில் இருந்து மாஸ்கோவில் இதுவே அதிக ஒருநாள் பாதிப்பாகும். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT